திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு சுங்க சாவடியில் தமிழக சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட நாம்தமிழர் கட்சியிர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது திடீரென சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 75க்கும் மேற்பட்ட நாம் தமிழர்கட்சியனரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். கைது நடவடிக்கை மேற்கொண்ட போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்ட 39 பேர் மீது 4 பிரிவுகளில் அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment