துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து 5 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு உடனடியாக நீர்வரத்து கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆணையிட்டுள்ளார்கள்.

துத்திப்பட்டு பரிதா காலனி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள நீர்வரத்து கால்வாயை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆம்பூர் நகராட்சி கேஎம்சாமி நகர் மற்றும் சாமியார் மடம் பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து ஒருவார காலத்திற்குள் தண்ணீர் சீராக செல்லும் வகையில் தூய்மை செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஆணையிட்டுள்ளார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, வட்டாட்சியர் திருமதி.மாகாலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment