நகர முழுவதும் வீடுகளில் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஊக்கு வைக்கவும், பொருட்கள் வாங்க பெண்கள் கடை கடையாக அலையாமல் இருக்க ஒரே இடத்தில் சுமார் 100 கடைகள் அமைத்து பொருட்கள் விற்பனை நடைபெற்றது.

மேளாவில் முழுக்க முழுக்க பெண்களை கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் இரண்டு நாடுகளும் பொருட்கள் வாங்க பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் வருகை தந்து பொருட்கள் வாங்கி சென்றனர்.
மேளா அமைத்ததின் காரணமாக பெண்கள் தயாரித்து பொருட்கள் சுலபமாக ஒரே இடத்தில் விற்க முடிந்தது, அதே நேரத்தில் பல வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொருட்கள் வாங்க பெண்கள் வீதி வீதியாக சென்ற நிலை மாறி அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கி மகிழ்ந்தனர். இதனால் மேளாவை ஏற்பாடு செய்த செஹேளியான் மகளிர் மேம்பாட்டு கழக உறுப்பினர் பாகிரா அதீக் என்பவருக்கு அனைத்து பெண்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தனர். 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த மேளா 2 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment