ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பலியான மாணவிகளின் தந்தை தண்டபாணி அரசுக்கு கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க பேட்டி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 October 2022

ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பலியான மாணவிகளின் தந்தை தண்டபாணி அரசுக்கு கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க பேட்டி.

கடந்த 15-09-2022 அன்று ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பலியான மாணவிகளின் தந்தை தண்டபாணி அரசுக்கு கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க பேட்டி.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள்களான ஜெய ஸ்ரீ (11ம் வகுப்பு), வர்ஷா ஸ்ரீ (6ம் வகுப்பு) ஆகிய இருவர் கடந்த 15.9.22ம் தேதி காலை தந்தை தண்டபாணியுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர். அப்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர். திரையரங்கம் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது கண்டைனர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெய ஸ்ரீ மற்றும் வர்ஷா ஸ்ரீ  சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர். தண்டபாணி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் இன்று அவர் சோலூரில் செய்தியாளர்களை சந்தித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 15ம் தேதி இரு மகள்களை பள்ளிக்கு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண் பிள்ளைகளும் சம்பவ இடத்தில் பலியானார். நானும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்சமயம் குணமடைந்துள்ளேன்.


இந்த விபத்துக்கு முக்கிய காரணம் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஆகையால் விபத்துகள் தவிர்க்க அனைத்து சுங்க சாவடிகளில் ஓட்டுனர்களுக்கு ஆல்கஹால் பரிசோதனை செய்ய வேண்டும். என்னுடைய மகள்களுக்கு நடந்த கோர விபத்து இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவரது மனைவி பானுப்பிரியா மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad