
மேலும், தனி நபரின் பட்டா நிலத்தில் பொது வழியாக பயன்படுத்துவதற்கு ஈடாக, அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிலத்தின் உரிமையாளரிடம் 9 அடி இடத்தை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டி வாங்கி தர பகுதி மக்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பகுதி மக்கள் வாங்கி தராததால் ஆத்திரமடைந்த பொது வழி நிலத்தின் உரிமையாளர், நேற்று ஜேசிபி எந்திரத்தின் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பட்டா நிலத்தை ஒற்றையடி பாதையாக மாற்றியமைத்துள்ளார். இதனால், நிலத்தின் உரிமையாளரிடம் சண்டையிட்ட அப்பகுதியினர் சிலர் ஜேசிபி எந்திரத்தின் கண்ணாடியை உடைத்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கிராமமக்கள் பொது வழி சாலை கேட்டு வாணியம்பாடி இருந்து திம்மாம்பெட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அம்பலூர் போலீசார், வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது வழி தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வாணியம்பாடி திம்மாம்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment