திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுக்கொள்ளை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைப்பெற்று கொண்டிருந்த போது திடீரென மண்டபத்தின் பெண்கள் பகுதியில் இருந்த மேற்கூறை கீழே விழுந்தது.அப்போது மண்டபத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக அவர்களின் உறவினர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment