வாணியம்பாடியில் இறைச்சி கடை மேற்கூரை பிரித்து பணப்பெட்டியுடன் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து தப்பி ஓடிய 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் கலீம் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு பஜார் பகுதிக்கு சென்று மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை பிரித்து உள்ள சென்ற மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த பணப்பெட்டியுடன் 30 ஆயிரம் ரோக்கத்தை கொள்ளை அடித்து செல்ல தயாராக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூச்சலிட்டதால் தப்பி ஓட முயன்ற மூவரும் பொதுமக்கள் உதவியும் பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் பஷீராபாத் தொகுதியை சேர்ந்த சவூத்(29), கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த மதன், சலாமாபாத பகுதியை சேர்ந்த தவ்சீப்(26) என்று தெரிய வந்தது. தொடர்ந்து நகர போலீசார் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment