திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா ஆகியோர் இணைந்து வணிக வளாகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தும், ரூ.20 ஆயிரம் ஆபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் இது போன்ற சோதனைகள் தொடரும் என்றும், அதனால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் சோதனை பணியின் போது இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment