திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடச்சேரி கிராமத்தை சேர்ந்த இந்துமதி(69) என்பவர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று பின்னர் வீடு திரும்பிய போது மருத்துவமனை அருகிலேயே மூதாட்டியிற்கு உதவி செய்வது போல் நடித்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 10 சவரன் தங்கநகையை பறித்துச்சென்றுள்ளனர்.

இதனையறியாத மூதாட்டி சிறிது நேரத்திற்கு பின்னர் தனது பையில் வைத்திருந்த தங்கநகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனை அருகில் சென்று வெகுநேரம் தேடியுள்ளார். சம்பவம் குறித்து மூதாட்டி இந்துமதி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் மருத்துவமனை எதிரில் இருந்த கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை மூதாட்டியிடம் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment