வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்துதல் ஓவிய போட்டியை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தொடக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 November 2022

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்துதல் ஓவிய போட்டியை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தொடக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாநில மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த ஓவிய போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, கல்லூரி ஆலோசகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்து போட்டியை பார்வையிட்டார்.


நிகழ்ச்சியில் 20 கல்லூரிகளை சேர்ந்த 255 மாணவர்கள் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெயர்கள் விரைவில் வெளியிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad