ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் அடகு கடையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc அவர்களின் உத்திரவின் பேரில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் மிகத்துரிதமாக செயல்பட்டு கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட 05 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2கிராம் எடை கொண்ட 150 மோதிரங்கள், 4 கிராம் எடை கொண்ட 50 மோதிரங்கள்,4 கிராம் எடை கொண்ட 25 ஜோடி கம்மல்கள், 8 கிராம் எடை கொண்ட 1 ஜோடி கம்மல் என மொத்தம் சுமார் ரூபாய்.21 இலட்சம் மதிப்புள்ள 76 சவரன் (608 கிராம்) தங்க நகைகள், 5கிலோ எடை கொண்ட கால் கொலுசுகள் மற்றும் 4 கிலோ எடை கொண்ட அரைஞாண்கயிறுகள் என மொத்தம் சுமார் ரூபாய்.3.6 இலட்சம் மதிப்புள்ள 09 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தம் ரூபாய்.24,60,000/- மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் ரூபாய்.1560/-, 06 செல்போன்கள் மற்றும் 09 இருசக்கர வாகனங்கள் ஆகியவை மீட்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சிறப்பான செயலாற்றிய தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment