திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் முரளி என்பவர் தானிய வகைகள் அரைக்கும் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி இருணாப்பட்டு பகுதியில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இன்று விடுமுறை என்பதால் கன்னிகா பரமேஸ்வரி அரவை மில்லில் தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment