திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் பாலாற்றில் அடித்து செல்லப்பட்டு தரை பாலத்தில் சிக்கிக் கொண்ட வேலூர் சேர்ந்த சரவணன் என்பவர் உடலை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

மின்விளக்குகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் உள்ளிட்டவை உடனடியாக ஏற்பாடு செய்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா,ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுரேஷ் குமார், ஆம்பூர் வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் 6 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்தில் இருந்து ஆலோசனை வழங்கிய சடலத்தை மீட்டனர்
No comments:
Post a Comment