திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கரீமாபாத் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் வெளி மாநிலத்திற்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான வீட்டு மனையில் 80 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து மினி வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். வருவாய்த்துறையினரை வருவதைக் கண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 80 மூட்டைகளில் சுமார் 4டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 4டன் ரேஷன் அரிசி மற்றும் மினி வேன் ஆகியவற்றை வாணியம்பாடி நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment