ஆம்பூரில் கடந்த ஜூலை மாதம் மத்திய உளவுதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் அனஸ் அலி வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசிக்கும் அனாஸ் அலி என்ற இளைஞர் வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி மத்திய உளவு துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அனஸ் அலி வீட்டில் மீண்டும் சோதனை மேற்க்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment