சொந்த வீடு இல்லாத பெண்ணின் பெயரில் ரூ.45 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

சொந்த வீடு இல்லாத பெண்ணின் பெயரில் ரூ.45 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்.

வாணியம்பாடியில் சொந்த வீடு இல்லாத பெண்ணின் பெயரில்  ரூ.45 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள். நேரில் விசாரணைக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தன் பெயரில் போலியாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்  காவல்நிலையத்தில் புகார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பேகம், இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் ஆகிய 2 பிள்ளைகள் உள்ளன. சொந்த வீடு கூட இல்லாத பாத்திமாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வேலூரில் உள்ள  வணிகவரி அலுவலகத்திலிருந்து 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸ் வந்த நிலையில் அதிர்ச்சியடைந்த பாத்திமா பேகம் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வரி ஏய்ப்பு அதிகாரிகள் பாத்திமா பேகத்தின் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்க்கொண்டு சென்றுள்ளனர். தனது மகளிற்கு திருமணம் செய்ய வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ள தங்க நகைகளை மீட்க சென்ற போது பாத்திமா பேகம் பெயரில் அவரது ஆதார் மற்றும் பான்கார்டுகளை பயன்படுத்தி ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் F.N. டிரேடர்ஸ் என்ற பெயரில் 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை முதலில் அடைத்து விட்டு அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு செல்லுமாறு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளதால் செய்வதரியாது திகைத்த பாத்திமாக பேகம் தனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டினை பயன்படுத்தி சிலர் 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இவர் குடியிருந்த வீடும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதையும் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புகாரின் பேரில் நகர காவல் துறையினர்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/