திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதாம் ஹுசேன் மற்றும் தாக்கீர் ஹு. இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களது மனைவிகள் ஒன்றாக நேதாஜி நகர் பகுதியில் அருகே அருகே வீட்டில் வசித்து வரும் நிலையில் நேற்று இரவு இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த போது இருவரது வீட்டின் பூட்டுகள் கத்தியால் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்கநகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து சதாம் ஹூசேன் மற்றும் தாக்கீர் ஹுசேன் ஆகியோர் மனைவிகள் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்க்கொண்ட காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய கத்தியை மீட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment