வாணியம்பாடியில் காவலர் தேர்வு நடைபெறும் 4 கல்லூரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2022

வாணியம்பாடியில் காவலர் தேர்வு நடைபெறும் 4 கல்லூரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வருகிற 27ஆம் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி,  பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது அங்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவுகளை பிறப்பித்தார். ஆய்வின்போது வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், கிராமிய காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad