திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், மின்னூர் ஊராட்சி, சின்னபள்ளிக்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர்களுக்காக 160 குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, கூட்டுறவு துறை மற்றும் பல்வேறு சார்பில் 935 பயனாளிகளுக்கு ரூபாய் 12.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர் குஷ்வகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment