வாணியம்பாடி நகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 November 2022

வாணியம்பாடி நகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்புக்கள் தொடர்பான வினாடி வினா, பேச்சு, கட்டுரை போட்டி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் உடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன், நகர காவல் ஆய்வாளர் நாகராஜன், அனைத்து மகளிர் நிலைய காவல்ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்ச்சியில்  இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50 பேர் அழைத்து வரப்பட்டு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் ஆகியவை காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் வழங்கி பாராட்டினார். 


தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்தும், குழந்தைகள் உரிமை சட்டங்கள் குறித்து அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி விளக்கி பேசினார். தொடர்ந்து போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள், காவல்நிலையம் செயல்படும் விதம் மற்றும் சட்டங்கள் குறித்தும் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன், நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad