வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் பாதையில் போதை ஆசாமி நின்றதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல மெதுவாக ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
அப்போது ரயில் பாதையில் போதை ஆசாமி நின்று கொண்டு இருந்ததை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். ரியில் பாதையில் நின்று கொண்டு இருந்த போதை ஆசாமியை பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்டு அனுப்பி வைத்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி உயிர் காப்பாற்றிய ரயில் ஓட்டுனருக்கு பொதுமக்கள் பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment