வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட்டுக்கு பதிலாக தரைப்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பித்து நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட்டிற்கு பதிலாக தரைபாலம் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தை உடனடியாக கையகப்படுத்தி காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள தென்னக ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையக்கு ஆணையிட சமூக சேவகரும் வாணியம்பாடி நகர மதிமுக செயலாளர் 25வது வார்டு நகர மன்றம் உறுப்பினருமானவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மேற்கொண்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்றம் அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment