செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.


ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம். செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த தகவலை பின்பற்றியதால் விபரீதம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(25) மற்றும்  நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (45) ஆகியோர் மின்னூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர்.


இருவரும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது, அதன் அடிப்படையில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால்  உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலின் பேரில் இருவரும் ஒன்றாக செங்காந்தள் பூ செடியின் கிழங்கை நேற்று முன்தினம் சாப்பிட்டுள்ளனர்.


அப்போது  இருவருக்கும் திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இருவரையும்  சிகிச்சைக்காக வேலூர் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் லோகநாதன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ரத்தினத்திற்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.


சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியம் பெற சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/