அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 13 November 2022

அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

வாணியம்பாடியில் பெய்த தொடர் கனமழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதால் மருத்துவர்கள் செவிலியர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்குள் போக சிரமத்திற்கு உள்ளாகினர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வெளி நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


தகவல் அறிந்து சம்பவ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அரசு மருத்துவமனை வளாகம், அதன் முன்பாக உள்ள சாலை மற்றும் நூருல்லா பேட்டை பகுதியில்    தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் மட்டும் இது போன்ற நிலை ஏற்படாது என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad