அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 November 2022

அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 677 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலவன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


கடந்த வியாழன்கிழமை முதல் இயற்பியல் ஆசிரியர் வேலவன் பள்ளிக்கு வராததால் +1,+2 மாணவர்கள் இடையில் இயற்பியல் ஆசிரியர் திருப்பத்தூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால்  மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கருதி இயற்பியல் ஆசிரியர் வேலவனை மீண்டும் பள்ளியில் பணி அமர்த்த வேண்டும் என்று கூறி பள்ளியின் நுழைவாயில் அமர்ந்து  +1, +2 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் அம்பலூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

போராட்டம் குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு கொடுத்த தகவலின் பெயரில் இயற்பியல் ஆசிரியர் வேலவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் வந்த பின்னர் மாணவர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்று போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குள் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad