ஊராட்சி மன்ற தலைவரை வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலையில் கையெழுத்திடவும் தடை; மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நடவடிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 15 November 2022

ஊராட்சி மன்ற தலைவரை வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலையில் கையெழுத்திடவும் தடை; மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நடவடிக்கை.


ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலையில் கையெழுத்திடவும் தடை; மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீராங்க்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திவ்யா, இவரது கணவர் ஜானகிராமன் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து ஊராட்சி மன்ற பணிகளை மேற்கொள்வதாக ஏற்கனவே பலமுறை புகார் எழுந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக வீராங்குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை இடித்துள்ளார். 

இதனால் அரசுக்கு 9 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாதனூர்  ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா ஜானகிராமன் ஊராட்சி மன்றம் தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலைகளில் கையெழுத்திடவும் தடை விதித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் வீராங்க்குப்பம் ஊராட்சி மன்றம் தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன்(பொறுப்பு) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad