வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடனை செலுத்த தவறியதால்; வீடு சீல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடனை செலுத்த தவறியதால்; வீடு சீல்.


வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடனை செலுத்த தவறியதால் நீதி மன்ற உத்தரவின் பேரில்  வீட்டில் உள்ளவர்களை  வெளியேற்றி பொருட்களை வெளியே அப்புறப்டுதியதால் பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராணி. இவர் வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.11 லட்சம் கடன் பெற்றுள்ளார். பின்னர் கடன் தொகையை மாத தவனையாக ஒரு வருடம்  செலுத்தியுள்ளார். அதன் பின்னர் கொரோனா கால கட்டத்தில் இருந்து தொடர்ந்து கடன் தொகையை கட்டாமல் விட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 


மேலும் நிதி நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். கடனை செலுத்த கால அவகாசம் வழங்கியும் கடனை செலுத்த தவறியதால்  கடன் வழங்கிய நிதி நிறுவனம் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இந்த வழக்கில் வேலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வீட்டை ஜப்தி செய்து  கொள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.


இதன் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனம் வழக்கறிஞர்களுடன் கடன் வாங்கியவரின் வீட்டிற்கு வந்து நீதிமன்ற உத்தரவு ஆணையை காண்பித்து  அவர்களை வெளியே  செல்லுமாறு கூறியுள்ளனர்.வீட்டின் உரிமையாளர் மேலும் கால அவகாசம் கேட்டுள்ளார்.மேலும் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 


பின்னர் மறுப்பு தெரிவித்த நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் என அனைவரையும் வலு கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டில் இருந்த  பொருட்களை வெளியே அப்புறப்படுத்தி வீட்டிற்கு சீல் வைத்து வீடு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பு பேனரை கட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad