திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் கிராமிய காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவன் மின்னுக்கு பின் பதில் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவனை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவன் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதி சேர்ந்த விஜய்(19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவன் வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவனிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள், இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment