வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை. போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை. போலீசார் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியபனூர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி. இவர் கடந்த வியாழக்கிழமை சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள விஜி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி மேற்கொண்டுள்ளனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளைய சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் உண்டில் உடைத்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்று சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவங்கள் குறித்து கிராமிய மற்றும் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad