திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் ஸ்ரீ் திருப்பதி கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூசாரி வழக்கம் போல் நேற்று இரவு பூஜையே முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று இன்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்த போது கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கோவிலில் நுழைந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை தூக்கி செல்வது போன்று காட்சி பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர். மேலும் இதேகோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் உண்டியல் கொள்ளை முயற்சி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment