திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் ஊராட்சி பள்ளத்தூர் மலையடி ஓரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை, உடனடியாக மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கை அடிப்படையில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி உடனடியாக நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் பிரசாந்த் தலைமையில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுகாதாரத் துறையினர்,கிராம மக்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment