ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியை புணரமைப்பு பணிகள் மேற்கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 13 November 2022

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியை புணரமைப்பு பணிகள் மேற்கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி(அரசு நிதியுதவி பெறும் பள்ளி) இயங்கி வருகின்றது. இப்பள்ளி கடந்த 1975ம் ஆண்டு துவங்கப்பத்துள்ளது. இதில் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 


இந்நிலையில் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் சேதமடைந்த நிலையிலும், கழிவறைகள் இல்லாமலும் இருந்து வந்தது. இதற்காக பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி வகுப்பறைகள், உள்ளரங்கு, கழிவறைகள், வர்ணம் பூசி புணரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.


இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் ஏ.ஜி. வேலாயுதம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எம். புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் எம்.ஜி.பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினர்களாக ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஶ்ரீதர் பலராமன்(RI. Dist 3231), கே.ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் முன்னாள் மாணவர்கள் ஆர்.டி. சரவணன், ஆர்.முரளி, ஜெ.மதன், எம். மனோகரன், வி.கருணாகரன், எஸ். கோபி, சரிதா, வினிதா, குருபரன், பழனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நருவி மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் கலந்து கொண்டு புறனமைப்பு செய்யப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியை புறனமைப்பு பணி மேற்கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும்  பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியை டி.எல் அருளரிசி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad