திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை ஐயப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை செல்வது வழக்கம் விரத நாட்களின் போது 48 நாட்களும் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று சுவாமி ஐயப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மூலஸ்தான அரை முழுவதும் 2000, 500, 200, 100, 50, 20, 10ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதே போல உற்சவமூர்த்தி மற்றும் விநாயகர் சிலைகளும் ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வர்ண ரூப அலங்காரத்தில் அருள்பாளித்த ஐயப்பனை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment