திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டார்.

உலகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி சிறிது சிறிதாக மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரானா தொற்றின் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி துறை சார்ந்த அதிகாரிகளுடன் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை மருத்துவ இயக்குனர் மாரிமுத்து ஆலோசனையின்படி தயார் நிலையில் இருந்த நூறு படுக்கைகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சிவகுமார் முன்னாள் சேர்மன் அரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment