திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி விளையாட்டு மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 2022 மற்றும் 2023 கிரிக்கெட் லீக் போட்டியை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி சுமார் 30 ஓவர் கொண்ட போட்டியாக நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மகன் பிரபா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சுப்ரமணி, செயலாளர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் போட்டியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மே.அண்ணாமலை
No comments:
Post a Comment