அணிகானூர் கிராமத்தில் 50 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய ஏரி! பூஜை செய்து மலர் தூவி தண்ணீரை வரவேற்ற பொதுமக்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

அணிகானூர் கிராமத்தில் 50 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய ஏரி! பூஜை செய்து மலர் தூவி தண்ணீரை வரவேற்ற பொதுமக்கள்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் கும்மிடிக்காம்பட்டி கிராமத்தில் சின்னூர் ஏரி மற்றும் அணிகனூர் ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழை மற்றும் லேசான மலையின் காரணமாக சின்னூர் ஏரி நிரம்பியது.


அதனைத் தொடர்ந்து  அணிகானூர் ஏரி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கென வலி மற்றும் வாய்க்கால் எதுவும் இல்லாத காரணத்தால் பல வருடங்களாக ஏறி நிரம்பாமல் இருந்து வந்தது.


இந்த நிலையில் சின்னுர் ஏரியிலிருந்து 4 மின்மோட்டார் மூலம் தண்ணீரை பம்ப் செய்து அணிகனூர் ஏரிக்கு தண்ணீரை நிரப்ப ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன் முயற்சியின் பேரில் 50 வருடங்களுக்குப் பிறகு தற்போது அணிகானூர் ஏரி நிரம்பி வழிந்தது.


அதன் காரணமாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஊர் பொதுமக்கள் அணிகனூர் ஏரிக்கு பூஜை செய்து தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.


மேலும் இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

*/