திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் நகரப் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள், மஞ்சப்பை மற்றும் முக கவசம் வழங்கினர்.
இதில் நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, திமுக நகர செயலாளர் சாரதிகுமார், அரசு அதிகாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மே. அண்ணாமலை
No comments:
Post a Comment