எரிப்பகுதிலிருந்து சண்டியூர் வரையில் விடபட்டு இருந்த புறவழி சாலை பணிகள், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்க்காக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் மின் கம்பத்தோடு மழை நீர் கால்வாய் சேர்த்து கட்டபட்டு வருகிறது.
ஏற்கனவே கழிவுநீர் கால்வாயில் மின்கம்பம் கட்டுவதும் அதே நேரத்தில் மழை நீர் கால்வாயுடன் போர்வெல் அப்புறப்படுத்தாமல் கட்டுவதும் போன்ற சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்.
நாட்றபள்ளியில் தற்பொழுது புறவழி சாலை அமைக்கும் பணிக்காக நடைபெற்று வரும் நிலையில் அதற்கான மழைநீர் கால்வாயுடன் மின் கம்பத்தை சேர்த்து கட்டப்படுவது சர்ச்சைக்குரியதாக உள்ளது.
எனவே ஒப்பந்ததாரர் மீது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment