திருப்பத்தூர் மாவட்டம் சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலம் திருப்பத்தூர் போக்குவரத்து பனிமலையில் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தொடர்ந்து 364 கிலோமீட்டர் பேருந்து ஓட்டினாலும் வார விடுப்பு கொடுப்பதில்லை மேலும் வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்தால் ஒரு நாள் விடுப்பு வழங்குவது வழக்கம் ஆனால் அந்த விடுப்பை கூட தங்களுக்கு கொடுப்பதில்லை தன்னைப் பழி வாங்கும் நோக்கில் செயல்படுகிறார்.
மேலும் பணி ஓய்வு எடுக்கும்போது தன் மீது தவறான பழி சுமத்தி தன்னுடைய ஓய்வூதியத்தை தடுத்து நிறுத்தும் வண்ணம் வழிவகை செய்கிறார், என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலம் திருப்பத்தூர் கிளை மேலாளர் மயில் வாகனம் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அதேபோல் தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கம் மண்டல பொதுச் செயலாளர் மாது மற்றும் தர்மபுரி நகர் கிளை செயலாளர் அய்யாசாமி ஆகியோரும் தர்ணால் ஈடுபட்டனர், இது குறித்து தகவல் அறிந்து சென்ற நிருபர்களை கிளை மேலாளர் மயில்வாகனம் காவலாளியை வீட்டு நிருபர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்த சம்பவமும் அரங்கேறியது
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment