திருப்பத்தூரில் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் திருமணம்! பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

திருப்பத்தூரில் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் திருமணம்! பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார், இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கனகராஜ் மகள் முத்து மணிமாலா (23) இவர் பிபிஏ முடித்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 24ஆம் தேதி கடையநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து உள்ளனர், மேலும் இதன் காரணமாக முத்துமணி மாலாவின் பெற்றோர்கள் மாற்று சமுதாயத்தைச் சார்ந்த பையன் எனது மகளை திருமணம் செய்து கொன்றார் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மேலும் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் காரணமாக  இன்று காதல் ஜோடி இருவரும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/