எனவே பட்டா நிலத்தில் பாட்டை புறம்போக்கு இடம் என தவறுதலாக குறிப்பிட்டு உள்ளதால், அதனை நீக்க கோரி கடந்த 13.10.22அன்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து சின்ன பாப்பா நிலத்திற்கு அருகாமையில் சுமார் இரண்டு ஏக்கர் அளவிலான கல்குவாரி அமைந்துள்ளது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சீனிவாசன் உறவினருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. அதன் காரணமாக கல் குவாரி உரிமையாளருக்கு கவுன்சிலரின் உறவினரான நிலத்தை விற்க வழிவகை செய்துள்ளனர். இதன் காரணமாக சின்ன பாப்பா பட்டா நிலத்தின் வழியாகத்தான் கல்குவாரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனை அறிந்த திமுக கவுன்சிலர் சீனிவாசன் கணிசமான தொகையை கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரியை விலைக்கு வாங்கி கொடுத்து சின்ன பாப்பா நிலத்தில் உள்ள 20 சென்ட் அளவில் பாட்டை புறம்போக்கு நிலம் உள்ளது.
எனவே கல் குவாரிக்கு ரோடு அமைத்து தரப்படும் என பட்ட நிலத்தை அளக்க வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. வாய் தகராறு அதிகமாக அங்கிருந்து கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து சென்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ள பொழுது பணத்தை வாங்கிக்கொண்டு கல்குவாரிக்கு பாதை அமைத்து தர கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கல்குவாரி உரிமையாளருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் என சின்ன பாப்பா குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment