கந்திலி அருகே தனியார் பள்ளி விளையாட்டு விழாவை துவக்கி வைத்த திருப்பத்தூர் சட்ட உறுப்பினர் க.தேவராஜ். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

கந்திலி அருகே தனியார் பள்ளி விளையாட்டு விழாவை துவக்கி வைத்த திருப்பத்தூர் சட்ட உறுப்பினர் க.தேவராஜ்.

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சியில் சென்மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் டே விழாவிற்கு  திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் க.தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தார்.


முன்னதாக மாணவ மாணவிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த  குடிகளை பார்வையிட்டார், இந்த நிகழ்ச்சியில் கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.எஸ்.ஏ. மோகன்ராஜ், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, கந்திலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.ராஜா, பள்ளி தாளாளர் சி.எஸ்.ராஜா, மற்றும் இயக்குனர்கள் சி.எஸ்.ஆர்.வினோத், சி.எஸ்.ஆர்.கௌதம், கொரட்டி ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹேமலதா வினோத்குமார், சந்திரசேகர், அவல்நாயக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் அவர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.           


- மாவட்ட செய்தியாளர். மே.அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/