
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து உயிரை பணயம் வைத்து மாணவ மாணவிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதே போல நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலையை பணியின் காரணமாக கடக்க வேண்டிய உள்ளது.
அதனால் இப்பகுதியில் அதிக விபத்துக்கள் மற்றும் உயிர் பலிகள் ஏற்பட்டு பல குடும்பங்கள் சீரழியும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் பலியான சோகமும் அதேபோல் இரண்டு நபர்களின் விபத்தில் கால்கள் உடைந்து நிரந்தர ஊனமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர், இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
- மாவட்ட செய்தியாளர் மே. அண்ணாமலை.

No comments:
Post a Comment