![]() |
மாதிரி படம் . |
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ரோடு மூன்றாவது தெருவை சேர்ந்த உதயகுமார் (24), அண்ணா நகரை சேர்ந்த சந்துரு (18) ஆகியோர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்தனர். அப்போது திருப்பத்தூர் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த போது அவர்களை பிடித்து விசாரணை செய்து போது அவர்கள் கஞ்சா குடித்து இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த 100கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ, அண்ணாமலை.

No comments:
Post a Comment