திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணாமலை வணிக வளாகத்தின் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தியின் சிலையை மறைத்தபடி பேனர் வைத்ததால் திருப்பத்தூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல்துறை இரு தரப்பினரிடமும் சமரசம் பேசி பேனரை அகற்றியதால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர். மே.அண்ணாமலை

No comments:
Post a Comment