இதனைத் தொடர்ந்து இரண்டாவது கொரோனா அலை வந்தபோது இவரது தந்தை லியோ பிரான்சிஸ் மரித்த நிலையில் தாய் கேத்தரின் ஜார்ஜனா தன்னுடைய இளைய மகளுடன் சேர்ந்து போலி வாரிசு சான்றிதழ் வாங்கி திருப்பத்தூர் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி மற்றும் ஆவல் நாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்து தனியார் வங்கியில் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

இதனை அறிந்த மூத்த மகள் ஆலிஸ் ஆக்சிலியா இதுகுறித்து மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையிட்டதின் பெயரில் தாயும் தங்கையும் பத்திர பதிவு செய்தது போலி என்று கண்டறிந்து உள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் மீண்டும் தன்னையும் தன்னுடைய குடும்பத்தாரையும் விசாரணை என்கிற பெயரில் மாதக் கணக்கில் வரவழைத்து அலைகழித்து கொண்டிருப்பதால் மன உளைச்சல் அடைந்த ஆலிஸ் ஆக்சிலியா தன்னுடைய தாய் மீதும் தங்கை மீதும் மாவட்ட சார் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கை குழந்தையுடன் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இதே பெண் கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மே. அண்ணாமலை

No comments:
Post a Comment