திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி 14வது வார்டு பேரூராட்சிக்குட்பட்ட நஞ்சை நிலத்தை விவசாய நிலமாக அறிவிக்க வேண்டும் என 14வது வார்டு கவுன்சிலர் குருசேவ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாகாவிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது 14 வது வார்டு பேரூராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 438 மற்றும் 439/3 தற்போது நஞ்சை நிலமாக உள்ளதை பேரூராட்சி நிர்வாகம் விவசாயம் இல்லாத பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் இந்த நஞ்சை நிலத்திற்கு பக்கத்தில் ஏரியில் தண்ணீர் வருடம் முழுவதும் உள்ளதால் இது ஏரி பாசன நிலம் ஆகும் எனவே இந்த நிலத்தை விவசாய நிலமாக அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை


No comments:
Post a Comment