29 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியை பேசியது நெகிழ வைத்தது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

29 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியை பேசியது நெகிழ வைத்தது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  இந்தப் பள்ளியில் கடந்த 1992-94 கல்வியாண்டில் படித்து வந்த பழைய மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய  பள்ளி பருவ சக மாணவர்கள் மற்றும் தங்களுக்கு குருவாக இருந்து கல்வியை கற்றுத் தந்த ஆசிரியப் பெருமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இதே போல பள்ளியில் நடைபெற்றது.

இதில் பழைய மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு  சால்வை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி ஆசீ பெற்றனர் மேலும் சிறு வயது பள்ளி பருவத்தில் மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்து கொண்ட விதம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பு காட்டி கல்வி கற்றுத் தந்த விதம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அப்போது உடற்கல்வி மற்றும் என்சிசி ஆசிரியராக பணிபுரிந்த பேரறிவாளனின்  தந்தை குயில் தாசன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் காலத்தில்  வந்தீர்கள்  ஓய்வு பெற்ற காலங்களில் ராமாயணமும் மகாபாரதம் போன்ற மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு சமுதாயப் பணிகளையும் சமத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்று உரையாற்றினார்.


பழைய பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது பின்னர் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து  பிறகு பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சைவ அசைவ உணவு சாப்பிட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்


- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/