திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 2 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சுந்தரம்பள்ளி முதல் நத்தம் காலனி வரை 3 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மேலும் சுந்தரம்பள்ளி செல்லாரப்பட்டி மேற்கத்தியானூர் புதூர் நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, நல்லதம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட பால்வளத் தலைவர் இராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமாலை.
No comments:
Post a Comment