
பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய், கழிப்பறை, நடைபாதை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்வதற்காக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தென் இந்தியாவில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஜோலார்பேட்டையும் ஒன்று அதன் காரணமாக ரயில் ரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சீராக இல்லாத காரணத்தினால் அதனை மேம்படுத்தும் விதமாக ஆய்வு செய்து உள்ளேன்.
அதே போன்று ரயில்வே தரை பாலத்தின் நடுவில் மழை நீர் தேங்கி நிற்பதால் அதனை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் அதனை சரி செய்யவும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று என்னுடைய சொந்த செலவில் மின் மோட்டார் அமைத்து கொடுத்து உள்ளேன் என்றார். அதனை தொடர்ந்து எளிமையாக ரோட்டு கடையில் உள்ள சாதாரண டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார். உடன் சட்ட மன்ற உறுப்பினர் தேவராஜ், நகராட்சி சேர்மென்கள் காவியா விகடர், சங்கீதா வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment